அட இதுக்கு எல்லாமாடா இருப்பு கம்பியோட வருவீங்க ? ஒரு கஸ்டமர் JUST EAT மூலமாக KEBAB ஆடர் செய்துள்ளார். இதனை சதிக்(57) என்னும் நபர் டிலிவரி செய்துள்ளார். ஆனால் வந்த உணவு சூடாக இல்லை என்றும். குளிராக இருந்ததாகவும், அவர்கள் JUST EATக்கு அறிவிக்க. அவர்களின் பணத்தை திருப்பிக் கொடுத்த JUST EAT , சதிக் என்னும் நபருக்கு எச்சரிக்கை ரெக்ஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்கள்.
இதனால் கடுமையாக கோபம் கொண்ட சதிக் தனது மகன் மற்றும் மருமகனை அழைத்து வந்து, இரும்புக் கம்பி ஒன்றைக் கொண்டு வந்து கஸ்டமரை மிரட்டியுள்ளார். ஆனால் இவர்கள் ஒரு விடையத்தை கவனிக்க தவறி விட்டார்கள். அது என்னவென்றால் DoorBell என்னும் சிறிய ரக CCTV கமரா கஸ்டமர் கதவில் இருந்துள்ளது.
இவர்கள் மிரட்டியது, எத்தனை பேர் வந்தார்கள் என்பது எல்லாமே அந்த CCTV கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால் பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆனால் Just Eat , UBER, போன்ற உணவு வினியோகிக்கும் நிறுவனங்களிடம் இருந்து, இலவச உணவைப் பெற்றுக் கொள்ள, சில கஸ்டமர்கள் இது போல பல பொய்களைச் சொல்வது வழக்கம். கீழே வீடியோ இணைப்பு.