விமானத்திற்கு காத்திருந்த இளம் பெண்… விமானி செய்த திடுக்கிடும் சம்பவம்!

பிரபல சமூக வலைத்தளமான டிக்டாக் செயலியில் பிரபலமான அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டெப் போர்ஹர் என்ற இளம் பெண், விமான நிலையத்தில் விமானத்திற்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த விமானி ஒருவர் அந்தப் பெண்ணின் அருகில் வந்து, அவர் முன் இருந்த மேஜையில் ஒரு நாப்கின் துண்டை வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.

உடனே அந்த நாப்கின் துண்டை எடுத்துப் படித்த ஸ்டெப், “நான் இந்த உலகம் முழுவதும் பார்த்திருக்கிறேன். இந்த உலகத்தில் உன்னை விட அழகான பெண் வேறு யாரும் இல்லை” என அதில் எழுதியுள்ளார். இவற்றைத் தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்ட அந்தப் பெண், கடைசி வரை அந்த விமானியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ டிக்டாக்கில் வேகமாகப் பரவி ட்ரெண்டிங்கான நிலையில், இதுவரை 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

“அவருக்கு ஏற்கனவே மனைவி இருப்பதால் டெலிப்போன் நம்பரை எழுதவில்லை” என்றும், “அந்த விமானிக்கு மூன்று வெவ்வேறு ஊர்களில் மூன்று குடும்பங்கள் இருக்கலாம்” என்றும், “அவர் தனது சட்டைப் பையில் இதுபோல நிறைய எழுதி அடுக்கி வைத்திருப்பார்” என்றும் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

எது எதெல்லாம் டா ட்ரெண்ட் ஆக்குறீங்க!?