ட்ரம்ப் புட்டினுக்கு அதிரடி எச்சரிக்கை : சர்வதேச தடைகளால் அச்சத்தில் புட்டின் !

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா உக்ரைனை “மிரட்டிக் கொண்டிருக்கிறது” எனக் கூறி, வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என அறிவித்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சொஷியல்’ பிளாட்ஃபார்மில், “உக்ரைன் மீது தாக்குதல் தொடர்ந்தால், ரஷ்யாவுக்கு பெரிய அளவில் வங்கித் தடை, பொருளாதார தடைகள், வரிகள் விதிக்க பரிசீலிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யா-உக்ரைன் இருநாடுகளும் உடன்பாட்டுக்கு வர வேண்டும், இல்லையெனில் மிகத் தாமதமாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நாடோ பற்றிய நிலைப்பாட்டிலும், டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளானால், மற்ற நாடோ நாடுகள் பாதுகாப்பு வழங்குவார்களா என்ற கேள்விக்குப் பதில் கூறும் போது, அவர் அதில் உறுதியாக இல்லை எனக் கூறினார். ஆனால், இங்கிலாந்து பிரதமர் கீர்ஸ்டார்மரை சந்தித்தபோது, அவர் நாடோவின் முக்கியக் கொள்கை உடன்பாட்டை மதிப்பதாக தெரிவித்தார். அவரின் முதல் ஆட்சிக் காலத்தில், நாடோ நாடுகள் பாதுகாப்புச் செலவை அதிகரிக்க அவரின் அழுத்தம் காரணமாகவே நடந்ததாகவும் அவர் கூறினார்.

உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தில் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில், டிரம்பின் இந்நிலைப்பாட்டால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையில் குழப்பம் உருவாகும் அபாயம் இருக்கலாம். இதற்கிடையில், எதிர்க்கட்சி அரசியல் விமர்சகர்கள், டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.