லண்டனில் ஊடகவியலாளர் சந்திப்பும் பயிற்ச்சிப் பட்டறையும் நடைபெறவுள்ளது !

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு(Journalists without borders) உதவியோடு தமிழ் ஊடகவியலாளர் மற்றும் பல்லின ஊடகவியலாளர் இணையும் சந்திப்பொன்று மே மாதம் நடைபெறவுள்ளது. மே18 முள்ளிவாய்க்கல் தினம் தொடர்பான கலந்துரையாடலும், மேலும் பயிற்ச்சிப் பட்டறையும் இடம்பெற உள்ளது.

உலகில் உள்ள முக்கிய ஊடகங்களில் பணியாற்றும் 189 ஊடகவியலாளர்களை கொண்ட பெரும் அமைப்பாக , எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு உள்ளது.  நீங்கள் ஏற்கனவே ஒரு ஊடகவியலாளராக இருப்பின், அல்லது இந்த துறையில் ஆர்வமாக இருப்பின் இன் நிகழ்வில் கலந்துகொண்டு பயன் அடையலாம் என்று, எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கீழ காணும் தொலைபேசி இலக்கத்தில் அமைப்பை தொடர்பு கொள்ள முடியும். மேலும் உங்கள் மின்னஞ்சலை அனுப்பி உங்களை முன் பதிவு செய்துகொள்ளுங்கள்.

கண்ணன்:07950301300    :  athirvu@gmail.com