50% வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்திவைப்பு!

50% வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்திவைப்பு!

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்திவைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, அமெரிக்காவிடமிருந்து புதிய ஆயுதங்கள் மற்றும் விமானங்களை வாங்கும் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், மூன்று இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்ட பிரத்யேக செய்தியில், “டிரம்பின் வரிவிதிப்பு காரணமாக, இந்தியா அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலின் முதல் உறுதியான அறிகுறி இது” என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைக் கண்டிக்கும் விதமாக டிரம்ப், ஆகஸ்ட் 6 அன்று இந்த கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுள் மிக அதிகம்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சக மறுப்பு

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டதாக வெளியான செய்திகளை, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் “தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை” என்று கூறியுள்ளது. கொள்முதல் செயல்முறைகள் வழக்கமான நடைமுறைகளின்படி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்தச் சூழ்நிலை, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.