துபாய் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆயிரக் கணக்கான இந்தியர்கள், மகிழ்ச்சியில் கத்தி கூப்பாடு போட. பப் மற்றும் மதுபாண சாலையில் போதையில் இருந்த இந்தியர்கள், அப்படியே வெளியே வந்து வெம்பிளியில் உள்ள ஈலிங் வீதியை முற்றுகையிட்டார்கள்.
இதனால் நேற்று மாலை(09) வெம்பிளி ஈலிங் வீதி முற்றாக முடக்கப்பட்டது. வாகங்கள் நகரவே இல்லை. இதனால் பொரும் தொகையான பொலிசார் வந்து வாகன நெரிசலை கட்டுப்படுத்த முயன்றாலும், சில மணி நேரமாக அங்கே பெரும் களோபர நிலை காணப்பட்டது.
இதேவேளை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மற்றும் மது போதையில் இருந்த பல இந்திய இளைஞர்களை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாக அதிர்வின் நிருபர் தெரிவித்துள்ளார்.