கீழே வீடியோ இணைப்பு !
யாழில் Youtuber கிருஸ்ணா எனப்படுகின்ற இளைஞன் தான் மக்களுக்கு உதவி செய்வதாக சில வீடியோக்களை வெளியிட. அவருக்கு ஏராளமான பணத்தினை புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்கள் அனுப்பி வருகின்றனர். மேலும் தனக்கு கிடைக்கும் பணத்தில் 20% சத விகிதத்தை, சில பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கொடுத்து. அவர்களை தான் நடிக்க வைக்கிறார். அவர்களும் கண்ணீரும் கம்பலையுமாக நின்று, தமது துன்பத்தை சொல்ல, இருக்கிறார்களே இந்த இழிச்ச வாய் புலம்பெயர் தமிழர்கள். அவர்கள் உடனே கிருஷ்ணாவுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிலையில் யாழில் இவரிடம் உதவி கேட்ட பெண் ஒருவரின் வீட்டுக்குள் மது போதையில் நுழைந்து அடாவடியாக அதாவது இளம் பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்து இருக்கின்றார் (அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை காணொளி எடுக்க முயல்வதும் துஸ்பிரயோகம்தான்) அது தொடர்பான காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இவர் காற்றுவாக்கில் பல பெண்களோடு உல்லாசமாக இருப்பது, மது போதையில் மிதப்பது என்று கிடைக்கும் பணத்தை செலவு செய்து வந்ததோடு. சிறிய உதவிகளை செய்து விட்டு, கிடைத்த பணத்தில் தாம் எல்லாம் செய்து கொடுத்ததாக புலம்பெயர் தமிழர்களை நம்ப வைத்து மீண்டும் ஒரு வீடியோவை எடுத்து வெளிவிடுவார்.
அந்த காணொளியில் பதிவான சம்பவம்,
குடும்ப ஏழ்மை முன்பின் தெரியாத சொந்த பந்த உறவுமுறை எதுவுமற்ற ஏற்கெனவே பழகாத ஒருவன் வீட்டுக்குள் நுழைகிறான், வெளிநாட்டில் யாரோ கொடுக்கும் பணத்தை வைத்து உதவி செய்கிறோம் என்று சொல்லி காணொளி எடுக்க, அங்கே ஓர் இளம் பெண்.
அப்போது நடந்தது,
அவன்- 18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ “உங்கட மகள கூப்பிடுங்கோ” என்று சொன்னபடி குறித்த குமர் பிள்ளையின் அறையின் வாசல் வரை போகிறான் எதையோ வாங்கி வாசிக்கிறான் தனக்கு தமிழ் தெரியாதாம் என்கிறான் மகளை அழைக்க சொல்கிறான் வாசிக்க சொல்லி….