வேறு வழியே இல்லை. உக்ரைனை லாக் செய்த டொனால் ரம்.. இதனை அடுத்து உக்ரைன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து ராணுவத் தளபாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளதோடு. புலனாய்வுத் தகவல்களையும் பரிமாற அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது உலகில் மிக மிக முக்கியமான விடையம், புலனாய்வுத் தகவல் தான்.
எந்தப் பெரிய ஆயுதங்களைக் காட்டிலும், புலனாய்வுத் தகவல் இருந்தால் எதிரியை வெல்வது மிக மிகச் சுலபம். அமெரிக்காவில் உள்ள ஸ்பை சாட்டலைட் மூலம் அமெரிக்கா அனைத்து உலக நாடுகளையும், புலனாய்வு செய்து வருகிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அமெரிக்கா அதனை துல்லியமாக அறிந்து, உடனே தகவல் கொடுக்கும். இதனால் தான் இதுவரை காலமும் உக்ரைன் படைகள், போரில் பல வெற்றிகளை ஈட்டியது.
ஆனால் தான் சொல்வதை கேட்க்காவிட்டால், புலனாய்வுத் தகவல்களை தர மாட்டோம் என்று ரம் கூறிய விடையம், உக்ரைனுக்கு விழுந்து பெரும் இடி. இதனால் வேறு வழி இன்றி உக்ரைன் அதிபர் 30 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளார்.