ரஷ்யாவின் சராடோவ் நகரில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் சராடோவ் நகரில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் சராடோவ் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு தொழிற்சாலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சராடோவ் பிராந்தியத்தின் ஆளுநர் ரோமன் புசர்கின், தனது டெலிகிராம் பக்கத்தில், இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒரு தொழில் நிறுவனம் சேதமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், சேதமடைந்த தொழிற்சாலை குறித்து அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை.

உக்ரைனின் ஊடகங்கள், தாக்கப்பட்ட பகுதி ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்றும், அதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தத் தகவலை ரஷ்யா உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் தாக்குதலின்போது, குடியிருப்புப் பகுதி ஒன்றில் டிரோன் ஒன்று விழுந்து சேதமடைந்ததாகவும், இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் ஆளுநர் புசர்கின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் 121 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் எட்டு டிரோன்கள் சராடோவ் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலில் எத்தனை டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை.