வைரமுத்து குறித்து கேள்வி கேட்டதால் கோபத்தில் கொதித்த சின்மயி!

வைரமுத்து குறித்து கேள்வி கேட்டதால் கோபத்தில் கொதித்த சின்மயி!

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி சின்மயி, செய்தியாளர் சந்திப்பின்போது கோபமடைந்தார். இந்தச் சம்பவம் சென்னை, தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது.

ஒரு செய்தியாளர், சமீபத்தில் தேசிய விருதுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து பற்றி சின்மயியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சின்மயி கடும் கோபத்துடன், “வைரமுத்து பற்றி என்னிடம் தான் கேட்க வேண்டுமா? உலகில் வேறு யாரும் இல்லையா?” என காட்டமாகப் பதிலளித்தார்.

ஏழு ஆண்டுகளாக டப்பிங் யூனியன் மூலம் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அது குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு பெண் நிருபராக இருந்து கொண்டு இது போன்ற கேள்விகளை எழுப்பலாமா என அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்போது, அநாவசியமான கேள்விகளை எழுப்ப வேண்டாம் என சின்மயி கேட்டுக்கொண்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பிலிருந்து சின்மயி வேகமாக வெளியேறினார்.