கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 22 வயதாகும் ஜனார்த்தனா என்பவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதாகும் எலன்மேரி என்பவரும் காதலித்து வந்தார். எதிர்ப்பை மீறி இருவரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்து மாதா ஆலயத்தில் திருமணம் செய்து அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து ஜனார்த்தனனின் நண்பர்கள் 2 பேர் வேளாங்கண்ணி வந்திருந்தார்கள். ஜனார்த்தனா மற்றும் எலன்மேரி தங்கி இருந்த அறையிலேயே அவர்களும் தங்கி இருந்தார்கள். கடந்த 8ம் தேதி அன்று இரவு வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே ஜனார்த்தனா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்திருக்கிறார். இதற்கிடையே ஜனார்த்தனா-எலன்மேரி ஆகியோருடன் தங்கி இருந்த 2 பேர் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் மூலம் தஞ்சை வழியாக தப்பிச்செல்ல முயன்றுள்ளார்கள். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இவர்கள் பெங்களூரு சிவமொக்கா பகுதியை சேர்ந்த 19 வயதாகும் ஜீவன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். இதில் ஜனார்த்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எலன்மேரியே அவரை திட்டம் தீட்டி தீர்த்து கட்டினார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில் வெளிவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறும் போது, தீர்த்துக் கட்டப்பட்ட ஜனார்த்தனாவும், அவரது காதலி எலன்மேரி ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதலுக்கு இடையே எலன்மேரி, ஜீவனையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இருவரை காதலித்து வந்த எலன்மேரிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் முதல் திருமணம் வேறு ஒருவருடன் நடந்திருக்கிறது. கேட்க்கவே சற்று குழம்புகிறதா ?
மொத்தத்தில் 3 பெருடன் இருந்துள்ளார் இந்த எலன் மேரி. அதன்பிறகு 2-வதாக ஜனார்த்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜனாத்தனின் நடவடிக்கை பிடிக்காமல் 3-வதாக ஜீவனை கரம்பிடிக்க முடிவு செய்து ஜனார்த்தனனை திட்டம் போட்டு கொலை செய்தாராம். இந்த கொலை தொடர்பாக எலன்மேரி, ஜீவன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.