surrender or die Putin warning to Ukraine: சரணடையுங்கள் இல்லையேல் சாவு நிச்சயம் !

அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்து, ரஷ்யாவிடம் சரணடையுங்கள். இல்லையென்றால் சாவு நிச்சயம் என்று கடுமையான தொணியில், ரஷ்ய அதிபர் புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு, சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் இல்லையென்றால் கடுமையான விளைவைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று டொனால் ரம் பூச்சாண்டி காட்ட…

மறு முனையில் புட்டின் அது தொடர்பாக எதுவும் பேசாமல், உக்ரைனை சரண்டையச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். புட்டின் அமெரிக்க அதிபர் வெளியிட்டு வரும் எந்த ஒரு கருத்திற்கும் எதிர் கருத்து கூறவில்லை என்பது பெரும் ஆச்சரியமான விடையம். அதுபோக டொனால் ரம்பை புட்டின் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன் நிலையில், புலனாய்வுத் தகவல்களை கொடுக்காமல் அமெரிக்கா நிறுத்திய சமயம் பார்த்து. புட்டின் படைகள் நகர்வை மேற்கொண்டு, உக்ரைன் பிடித்து வைத்திருந்த ரஷ்ய நகரமான கேஷ் என்னும் இடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனால் உக்ரைனுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கே 10,000 ஆயிரம் உக்ரைன் படைகள், சிக்கியுள்ளார்கள். அவர்களை ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்துள்ள நிலையில். உக்ரைன் ராணுவம் சரணடைய மறுத்து வருகிறது.

அவர்கள் அனைவரையும் கொலை செய்ய புட்டின் திட்டம் தீட்டியுள்ளார். அவர் விடுத்த எச்சரிக்கை கேஷ் இல் உள்ள உக்ரைன் ராணுவத்திற்கு மட்டும் அல்ல. முழு உக்ரைனுக்கும் தான்.