கிவ் 15/03/2025; ரஷ்யாவுக்கு உள்ள இருக்கும் பெரும் நிலப்பரப்பான கேஷ் என்னும் இடத்தை, கடந்த ஆண்டு(2024) ஆகஸ்ட் மாதம் தொடக்கம் உக்ரைன் படைகள் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பல தடவை அதனை மீட்க்க ரஷ்ய ராணுவம் முயன்றும் தோற்றுப் போனது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தான், ரஷ்ய ராணுவம் எரிபொருள் செல்லும் பைப் வழியாக வந்து, கேஷ் நகரினுள் நுளைந்து தாக்க ஆரம்பித்தார்கள்.
இதனால் உக்ரைன் படைகளில் உள்ள சுமார் 10,000 ராணுவத்தினர் சிக்கிக் கொண்டார்கள். இதில் 460 உக்ரைன் ராணுவத்தை ரஷ்யா யாரும் எதிர்பார்காத வகையில் கைது செய்தது. உக்ரைன் படைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தனித்து இருந்தார்கள். இவர்கள் அனைவரையும் கொலை செய்ய ரஷ்ய ராணுவம் திட்டம் தீட்டி இருந்த நிலையில். நேற்றைய தினம் இரவு(14) உக்ரைன் ராணுவத்தினர், ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு, தப்பி மீண்டும் உக்ரைனுக்குள் வந்துள்ளார்கள்.
அங்கே பாரிய முன்னணி காவல் அரன் ஒன்றை நிறுவியுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ருயிட்டர்ஸ் செய்திச் சேவை, உறுதிசெய்துள்ளது. இதுவும் அமெரிக்காவின் புலனாய்வு தகவல் இன்றி நடக்க வாய்ப்பே இல்லை. காரணம்…
எந்தப் பகுதியில் ரஷ்ய ராணுவம் குறைந்த அளவில் நிலை கொண்டுள்ளது, என்று spy satellite மூலம் கவனித்து. அந்தப் பகுதியில் ஊடறுப்புச் செய்யச் சொல்லி தகவலை அமெரிக்கா கொடுத்து இருக்கும் என்று நம்பப் படுகிறது.