பிரிட்டனில் யூத-இஸ்ரேலிய நபரைத் தாக்கி கடத்திய முஸ்லிம் மூவர்

அல்லாவுக்கும் கடத்தலுக்கும் என்ன சம்பந்தம் ? என்பது தான் புரியவில்லை…

வேல்ஸில் மூன்று முஸ்லீம் ஆண்கள், யூத-இஸ்ரேலிய இசை தயாரிப்பாளரை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடிசைக்கு வரவழைத்து, அவரைக் கடத்த முன்றுள்ளனர்.இந்த முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது ஒரு புறம் இருக்க. இந்த சம்பவம் யூத வெறுப்பால் தூண்டப்பட்டது என்று சட்ட அமலாக்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.

மொஹம்மது காம்ரி (23), ஃபைஸ் ஷா (23), மற்றும் எலிஜா ஒகுன்னுபி-சிம் (20) ஆகியோர் கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்களுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

“அயல் காஷ்டி அவரது யூத பாரம்பரியம் காரணமாக குறிவைக்கப்பட்டார்,” என்று நீதிபதி கேத்தரின் ரிச்சர்ட்ஸ் இந்த சம்பவத்தை “திகிலூட்டும்” என்று விவரிக்கும் போது கூறினார். “அவர் முற்றிலும் அப்பாவி, கடினமாக உழைக்கும் இசை தயாரிப்பாளர், அவரது செல்வம் மற்றும் யூத பாரம்பரியம் பற்றிய உங்கள் புரிதலின் அடிப்படையில் நீங்கள் அவரை ஒரு பாதிக்கப்பட்டவராக அடையாளம் கண்டீர்கள்.”

இந்த மூவரும் டெலிகிராம் குழுவில் தாக்குதல் குறித்து விவாதித்தனர், அதில் யூதராக இருந்ததால் செல்வந்தராக இருப்பதாக நம்பப்பட்ட பாதிக்கப்பட்டவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், ஒரு தாக்குதல் தாரர் “நாங்கள் மூவரும் அல்லாஹ் மீது 100% முழு நம்பிக்கை வைத்துள்ளோம், எனவே நாங்கள் தோல்வியடைய முடியாது” என்று எழுதினார்.