மீண்டும் ஊடுருவிய உக்ரைன்: ரஷ்யாவுக்குள் நுளைந்த உக்ரைன் படைகள் ..பதற்றம் !

ரஷ்ய அதிபர் விளாடுமிர் புட்டினுடன் , அமெரிக்க அதிபர் டொனால் ரம் தொலைபேசி ஊடாக போர் நிறுத்தம் தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில், உக்ரைன் படைகள் திடீரென ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு, ரஷ்யா நாட்டினுள் பல KMக்குள் ஊடுருவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் உக்ரைன் படைகள் கைப்பற்றி இருந்த, “கேஷ்” என்னும் பெரும் நிலப்பரப்பை, ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தது.

இதில் 10,000 உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளிடம் சிக்கியதாக, ரஷ்யா அறிவித்த போதும் உக்ரைன் இது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் 460 உக்ரைன் ராணுவமே பிடிபட்டு இருந்தது. சுமார் 9,000 ஆயிரம் படைகளை உக்ரைன், பின் நகர்த்தி அவர்களை பாதுகாத்தது என்பதே உண்மை நிலை ஆகும்.

ரஷ்யாவில் உள்ள “”Belgorod province””, (south of Kursk,) என்னும் பிராந்தியத்தையே உக்ரைன் படைகள் தற்போது, தாக்கி கைப்பற்றியுள்ளது. இதனால் ரஷ்ய ராணுவமே அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை அமெரிக்காவும் சற்றும் எதிர்பார்கவில்லை. தற்போது உக்ரைனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவல்களை தான் அமெரிக்கா கொடுத்து வரும் நிலையில். ஏனைய சகல விடையங்களிலும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகிறது. இது அவர்களின் ஒரு திட்டமாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

உக்ரைன் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்லும் வேளையில், உக்ரைனிடம் ஏதாவது ஒரு துருப்புச் சீட்டு இருக்க வேண்டும் அல்லவா ? அதனால் தான் உக்ரைன் தொடர்ந்தும் ரஷ்யப் பகுதிகளை கைப்பற்றி வருகிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் உக்ரைன் ராணுவத்தை பாராட்டியே ஆகவேண்டும். என்ன நடந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடலாம் என்று தான் அவர்கள் இருக்கிறார்கள்.