விண்வெளி ஆய்வு மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்து, நேற்று முன் தினம் பூமிக்கு திரும்பியுள்ளார் சுனிதா வில்லியம். அவர் ஒரு அமெரிக்க இந்திய வம்சாவழி பெண். அவர் நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து 288 நாட்களுக்கு முன்னர் புறப்படும் போது எடுத்த படத்தையும். அவர் தற்போது பூமி திரும்பிய பின்னர் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சென்று, மிகவும் கதிரியக்கம் உள்ள விண்வெளியில் சுமார் 1 வருடம் வாழ்ந்ததால். அவரது DNA இல் கூட சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வயதான தோற்றத்தை தற்போது பெற்றுள்ளார். கால் எலும்புகள் நிலை கூட மாறியுள்ளது. முதல் இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர், விண்வெளி செல்வதே பெரிது. அதிலும் சுனிதா 288 நாட்கள் தங்கி உலக சாதனை படைத்து, இந்தியர்களை கெளரப்படுத்தி உள்ளார்.
ஆனால் அவரது உடல் நிலை குறித்தே பலரும் கவலை கொள்கிறார்கள். அவர் பூமியில் இயல்பு நிலைக்கு திரும்பவே பல மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி சென்று அங்கே உள்ள சர்வதேச நிலையத்தில், இருக்கும் பலருக்கு இது போல நடந்துள்ளது. பூமியில் உள்ள இயல்பான சூழ் நிலை அங்கே இல்லை. இதனால் எமது உடல் சில மாற்றங்களை உடனடியாக தோற்றுவிக்கும்.
இதில் மூளை மிகவும் பங்காற்றுகிறது. புவி ஈர்ப்பு விசை, காற்று அழுத்தம் என்பன குறைவாக இருக்கும் தருணத்தில் உடலில் பல மாற்றங்கள் உருவாகும். அதில் ஒன்று தான் இந்த வயது போன, முதிர்ந்த தோற்றம்.