தாய்லாந்தின் ஒரு டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பிரிட்டிஷ் பெண் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் அலெக்ஸாண்ட்ரா கிளார்க்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் படகின் இன்ஜின் அறையில் தீ பிடித்தது. அப்போது படகு கோ டாவ் தீவின் கடற்கரையில் இருந்தது.
தீ பிடித்த போது படகில் 22 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 16 பேர் சுற்றுலாப் பயணிகள், இருவர் குழு ஊழியர்கள், இருவர் டைவிங் பயிற்சியாளர்கள் மற்றும் இருவர் உதவி டைவிங் பயிற்சியாளர்கள் ஆவர்.