பிரித்தானியாவின் வான்வெளியில் அண்மையில் பறந்த ஒரு மர்ம வெள்ளை பலூன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் ஜேர்மனியின் Burgkirchen an der Alz நகரில் இருந்து திங்கட்கிழமை மாலை புறப்பட்டது. இதில் ஏவியேஷன் இன்ஜினியர் வூசி வாக்னர் மற்றும் சாகச பயணி கோல்யா பேக்கர்ட் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த பலூன் செவ்வாய்க்கிழமை மாலை பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் நுழைந்து, கேம்பிரிட்ஜ்ஷையர், மிட்லாண்ட்ஸ், யார்க்ஷையர் மற்றும் கவுண்டி டர்ஹாம் வழியாக பயணித்து, புதன்கிழமை மதியம் எடின்பர்க் அருகே இறங்கியது.
இந்த பயணத்தின் நோக்கம் ஸ்காட்லாந்தை அடைவதாகும். கோல்யா பேக்கர்ட், இந்த பயணத்தின் மூலம் உலக சாதனையை முறியடிக்க முயற்சிக்கிறார். இந்த மர்ம பயணம் பலரது கவனத்தையும், வியப்பையும் பெற்றுள்ளது.