விஜயகாந்த்தை ‘அண்ணன்’ என்று நடிகர் விஜய் “தேமுதிக தொண்டர்களை விஜய் இழுக்கிறாரா?”

விஜயகாந்த்தை ‘அண்ணன்’ என்று நடிகர் விஜய் “தேமுதிக தொண்டர்களை விஜய் இழுக்கிறாரா?”

34 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்! – விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் உருக்கம்!

34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், விஜயகாந்த் குடும்பத்தினரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படம் பார்த்த பிறகு, விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் அளித்த பேட்டி அனைவரையும் கண்கலங்க வைத்தது.


சண்முகபாண்டியன் உருகிய தருணம்:

“கேப்டன் பிரபாகரன் உருவானபோது நான் பிறக்கவே இல்லை. தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து ரசித்த இந்த படத்தை இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் திரையில் பார்க்கிறேன். படத்தைப் பார்த்த பல இடங்களில் அப்பாவைப் பார்த்து நான் அழுதுவிட்டேன். அவரை அவ்வளவு அழகாகக் காட்டியிருந்தார்கள். குறிப்பாக, அந்த ஓப்பனிங் சண்டைக் காட்சியும், அவரது டயலாக்குகளும் அற்புதம். 1990களில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இப்போதும் புத்தம் புதியதாக இருக்கிறது. இதுபோன்ற படங்களை இக்கால இயக்குநர்கள் எடுக்க வேண்டும்,” என சண்முகபாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


கேப்டன் பிரபாகரன் பார்ட் 2!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “சண்முகபாண்டியனை வைத்து ‘கேப்டன் பிரபாகரன் பார்ட் 2’ எடுப்பேன்” என்று கூறியதற்கு, “நான் அவருக்குக் கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்,” என சண்முகபாண்டியன் ஆர்வத்துடன் பதிலளித்தார்.


விஜய் குறித்த கேள்விக்கு சாமர்த்தியமான பதில்!

சமீபத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் விஜயகாந்த்தை ‘அண்ணன்’ என்று நடிகர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, “விஜய் சின்ன வயதிலிருந்தே அப்பாவை அறிந்தவர் என்பதால் அவரை ‘அண்ணன்’ என்று பார்க்கிறார்,” என்றார்.

அப்போது, “தேமுதிக தொண்டர்களை விஜய் இழுக்கிறாரா?” என்ற சாமர்த்தியமான கேள்விக்கு, “அப்பா மக்கள் சொத்து. இந்த படத்தில் கூட, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என டயலாக் பேசியிருப்பார். யார் யாரை இழுக்கிறார்கள் என்பதை மக்கள் சொல்வார்கள். இப்போது கேப்டன் பிரபாகரனைப் பற்றி பேசுவோம். இந்தப் படம் போல் அவரது பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆக வேண்டும்,” என புத்திசாலித்தனமாகப் பேசிவிட்டு, கேப்டனின் புகழை மீண்டும் பேசவைத்தார் சண்முகபாண்டியன்.