முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதவியில் இருந்தபோது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்றையதினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் மிகவும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க திகழ்ந்தார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதவான் நிலுப்புலி லங்கபுர, “சந்தேகநபரான (விக்கிரமசிங்க) செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்கப்படுவார், ஆனால் அவரது மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலை அல்லது வேறு ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாம்” என உத்தரவிட்டார்.
இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.