தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும் குணசத்திர நடிகையாகவும் ஹீரோயின் ஆகவும் கிறுகிறுக்க வைத்தவர் நடிகை மும்தாஜ். இவர் 2000 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக டாபிக் ஹீரோயின் அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவரது நடிப்பும் இவரது பாடி லேங்குவேஜும் சீக்கிரத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஈர்த்தது.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதிலிருந்தே இருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடி விட்டார்கள். முதன் முதலில் 1939 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் எழுதிய மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் மும்தாஜ். அந்த படம் ரசிகர்கள் எழுதிய மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று முதல் படமே அவர்களை ஆஹா ஓஹோ என பேச வைத்தது. அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய்யுடன் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு ஆட்டம் போட்டு வேற லெவல் ஹிட் கொடுத்தார்.
அவரை மறக்கவே முடியாத அளவுக்கு ரசிகர் மனதில் போய் உட்கார்ந்து விட்டார் மும்தாஜன். தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்கு எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன், சொன்னால்தான் காதலா, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, ஏழுமலை, லண்டன், வீரசாமி, ராஜாதி ராஜா இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்து முக்கிய கேரக்டர் நடித்த அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களின் படங்களை சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஐட்டம் சாங் ஆடி மும்தாஜ் ஒரு கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமா வெளிப்படுத்தியிருந்தது.
இதனுடைய சில வருடங்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். அதன் பின்னர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் மக்களின் பார்வையில் தென்பட்டு பிரபலமானார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
நான் ஒருவரை உண்மையாக உருகி உருகி காதலித்தேன். ஒருவருக்கொருவர் உண்மையாக காதலித்தோம். சில நாட்கள் நன்றாக தான் நீங்கள் காதல் போய்க் கொண்டிருந்தது. ஆனால், எல்லோருடைய வாழ்க்கையில் வருவது போல சில பிரச்சனைகள் வந்ததால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம். சரி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை? என கேட்டதற்கு எனக்கு திருமண ஆசையே வரவில்லை. எனக்கு 20 வயதில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் என்னுடைய உடல்நிலை ரொம்பவும் மோசம் அடைந்து விட்டது.
அதன் பிறகு 26 அல்லது 27 வயதில் உடல் நிலையில் பாதிக்கப்பட்டேன். அதனால் திருமணம் என்ற எண்ணம் எனக்கு வரவே இல்லை விருப்பம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். மிகவும் பிடிக்கும் குழந்தைகளோடு இருப்பது எனக்கு கொள்ளை விருப்பம் என்று கண்கலங்கியபடி பேசி இருக்கிறார். தன்னுடைய அண்ணன் தான் தனக்கு இப்போது எல்லாமே அவர் என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அண்ணனும் அண்ணனின் குடும்பமும் எனக்கு இருக்கிறார்கள். அதுவே போதும் என மன நிம்மதியோடு இந்த நேர்காணல் நிறைவு செய்தால் நடிகை மும்தாஜ்.