வீராங்கனைகள் நடத்திய அதிரடி வேட்டை! முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி?

வீராங்கனைகள் நடத்திய அதிரடி வேட்டை! முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி?

வீராங்கனைகள் நடத்திய அதிரடி வேட்டை! பெட்ரோல் பங்கில் முகமூடி கொள்ளையன் சிக்கியது எப்படி?

இங்கிலாந்தின் ஸ்டாக்போர்ட் நகரில், இரு பெண் காவலர்கள் நடத்திய துணிச்சலான ஆப்ரேஷன், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத் திருட்டில் ஈடுபட்ட ஒரு முகமூடி இளைஞனை, பெட்ரோல் நிலையத்தில் வைத்து துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்தது என்ன?

ஸ்டாக்போர்ட்டின் ஆஃபெர்டன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், முகமூடி அணிந்த மூன்று இளைஞர்கள், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள், அவர்களை பின்தொடர்ந்து, ஒரு சமயத்தில் துணிச்சலாக அணுகி, மூன்று பேரில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.

இந்த ஆப்ரேஷனின்போது, அந்த 14 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து திருட்டு வாகனம், திருட்டு பொருட்கள், மற்றும் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பெண் காவலர்களுக்குப் பாராட்டு!

இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஜோசப் பாரன், “இது எங்கள் அணியைச் சேர்ந்த அதிகாரிகளின் சிறந்த நடவடிக்கை. வாகனத்தைப் பின்தொடர்ந்து, குழுவினரை நிதானமாக அணுகி, ஒருவரைப் பிடிப்பதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மீது, வாகன திருட்டு, திருட்டு பொருட்களை கையாளுதல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.