உக்கிரைனை 2 டாக உடைக்க புட்டின் திட்டம்: தலை நகரை பெட்டி யடித்து பிரிக்க 40மைல் நீளமான படைகள்

இந்த செய்தியை பகிருங்கள்

உக்கிரைன் நாட்டை அப்படியே 2 டாகப் பிளந்து, தலை நகர் கிவியை, தனிமைப்படுத்த புட்டின் பெரும் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இதனை அடுத்து பெரும் படை ஒன்றை புட்டின் உக்கிரைன் நோக்கி நகர்த்தியுள்ளார். அந்தப் படை சும்மார் 40 மைல் நீளமான தொடர் படையணியாக உக்கிரைன் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது. இதனை அமெரிக்க உளவு சாட்டலைட் படம் எடுத்துள்ளது. எனவே இந்தப் பெரும் படை எங்கே நகர்கிறது என்பது தொடர்பான அனைத்து விடையங்களையும், அமெரிக்கா உடனடியாக உக்கிரைன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது. உக்கிரைன் நாட்டை ஊடறுத்து, அனைத்து இடங்களையும் முடக்க புட்டின் முடிவு கட்டி விட்டார். முன்னர் தனது மொத்தப் படைகளில் இருந்து சுமார் 1லட்சத்தி 20,000 ஆயிரம் பேரை அனுப்பினார். ஆனால் அது போதவில்லை… இதனால் மேலதிகப் படைகளை…

அவர் உக்கிரைன் நோக்கி நகர்த்தி வருகிறார். ஒட்டு மொத்தத்தில் ரஷ்யாவில் உள்ள மொத்தப் படையில் 3ல் 2 பங்கு படைகள் உக்கிரைனில் உள்ளது. அந்த அளவு உக்கிரைன் எதிர் தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறது என்பது இதன் பொருள் ஆகும்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us