உக்ரைன் ரஷ்ய எல்லையில், சுமார் 600 மைல் தொலைவான தடைச் சுவரை உக்ரைன் போட்டுள்ளது. சுமார் 42 லட்சம் காங்கிரீட் தடைகளை பாவித்தும், கவச வாகனங்கள் கடந்து செல்ல முடியாத வாறு வடிவமைக்கப்பட்ட தடைகளை உக்ரைன் பாவித்துள்ளது. இதில் ரேசர் வயர்களும் அடங்குகிறது. இதனை கடக்க முற்படும் வேளை, அல்லது அகற்ற முற்பட்டால் ஆங்காங்கே கண்ணிவெடிகளும் உள்ளது. இதனால் இதனைக் கடப்பது என்பது, சற்றுக் கடினமான விடையம் தான்.
மேலும் இந்த எல்லைக்கு பின்னால் நிலையான ஒரு உக்ரைன் ராணுவத்தை, நிலை நிறுத்தியுள்ளது உக்ரைன். இதனால் ரஷ்யப் படைகள் மேலும் முன்னேற முடியாதவாறு இந்த தடைச் சுவர் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பல மாதங்களாக கடுமையாக வேலைசெய்து, மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவம் இணைந்து இந்த 600 மைல் தொலைவான தடையைப் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.