மொராக்கோவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம டைனோசர் : வியப்பில் விஞ்ஞானிகள் !

மொராக்கோவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம டைனோசர் : வியப்பில் விஞ்ஞானிகள் !

மொராக்கோவின் அடக்கமான மலைகளில், 165 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மர்ம டைனோசரின் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டு, உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. “ஸ்பைக்கோமெல்லஸ்” (Spicomellus afer) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த டைனோசரின் கழுத்தைச் சுற்றி, கோல்ஃப் கிளப் நீளமுள்ள (சுமார் 1 மீட்டர்) மாபெரும் முட்கள் அமைந்த ஒரு எலும்புத் தகடு உள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த உயிரினத்திலும் இதுவரை கண்டறியப்படாத ஒன்றாகும்!

இதன் விலா எலும்புகளுடன் நேரடியாக ஒட்டிக் கொண்ட கூர்மையான முட்கள், அதன் உடலை ஒரு இரும்புத் கோட்டை போல் பாதுகாத்துள்ளன.

அதன் இடுப்புக்கு மேல் இரண்டு பிரமாண்டமான முட்கள் இருப்பதுடன், அதன் வால் பகுதியிலும் ஒரு ஆயுதம் (கடா அல்லது முட்கள்) இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த டைனோசரின் வினோதமான மற்றும் பிரம்மாண்டமான முட்கள் பாதுகாப்புக்காக மட்டுமே அல்ல, இணையை ஈர்க்கவும், சக போட்டியாளர்களுடன் சண்டையிடவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த அரிய கண்டுபிடிப்பு, கவச டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது, உலகின் பழமையான கவச டைனோசராகக் கருதப்படுகிறது.