தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. ஆனால் பெரிய வசூல் படைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகப்பெரிய அட்டர் பிளாப் கொடுத்து அவரது கியரே காலி பண்ணும் அளவிற்கு பின்தங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இந்த படம் வெறும் 15 கோடி மட்டுமே வசூலித்து மோசமான நஷ்டத்தை சந்தித்தது.
இது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லால் சலாம் படத்தின் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் கேட்டதற்கு அவர் ஒரு சப்பக்கட்டு காரணத்தை கூறி இருக்கிறார். இதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் சொன்ன காரணத்தை என்னவென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கே சிரிப்பு வந்துரும். என்னதான் என்று கேளுங்களேன்.
அதாவது படத்தில் 21 நாட்கள் எடுத்த காட்சிகள் காணாமல் போய்விட்டது ஆயிரக்கணக்கான பேர் சூழ்ந்து 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டியை நாங்கள் ஷூட் செய்திருந்தோம். ஆனால், அவை அனைத்துமே காணாமல் போய்விட்டது. இதனால் மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தொலைந்த ஹார்ட் டிஸ்கில் இருந்த காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால்,அது ரொம்ப கஷ்டம் என்பதால் இருக்கும் காட்சியை வைத்து படத்தை எடிட்டிங் செய்துவிட்டு படத்தை எடுத்து விட்டோம்.
ஒரு வேலை ஹார்ட்டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்த கருத்து இன்னும் தெளிவாக எடுத்து கூறியிருக்க முடிந்திருக்கும். இதுபோன்ற தவறுகள் மூலம் பாடங்களை கற்றுக் கொண்டேன். இந்த தவறு ஒரு இயக்குனராக தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். இதனை சிலர் பாராட்டி நீங்கள் செய்து தவறால் தான் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் நஷ்டப்பட்டு தலையில் துண்டை போட்டிருக்கிறார்கள் என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்…இவ்வளவு கூலாக சொல்லி கதையையே முடிச்சிட்டீங்களே… உன்னால் ஒரு தயாரிப்பாளரின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இப்போ போதுமா? இது சந்தோஷமா? என பலர் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.