இலங்கையில் தாயை பாலியல் வன்கொடுமை செய்து குழந்தையை தாயுடன் சேர்த்து புதைத்த கொடூரத்தின் உச்சத்தை அந்நாட்டு பாராளுமன்ரத்தில் ஆவேசமாக எம்பி அர்ச்சுனா பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயுடன், குழந்தை எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து குழந்தையுடன் சேர்த்து புதைத்தது தெரிய வந்தது. கொடூரத்தின் உச்சமான இந்த சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் சர்ச்சையாகியுள்ளது.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே எம்பி அர்ச்சுனா பேச தொடங்கினார். அவரது உரையில், ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பொழுது அந்த பெண்ணுடன் இருந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். தாய் குற்றுயிராய் இருக்கும் போது, பள்ளத்தை தோண்டி அதில் அந்த பெண்ணை போட்டு அவளின் மேலே இறந்த குழந்தையையும் போட்டு புதைத்துள்ளனர்.
இறக்கும்போதும் தனது குழந்தையை மார்போடு அனைத்த படி அந்த பெண் இறந்துள்ளார். இப்படி ஒரு கொடூரத்தின் உச்சம் அரங்கேறியிருக்கும்போது பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து ஐ.நா. செயலாளர் வோல்கர் டர்க் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க கூடாது என தடுப்பது பெரிய சதியாக உள்ளது. இதை பற்றி கூட பாராளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பது ஏன் என ஆவேசமாக அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் செம்மணியில் கிடைக்கப்பட்ட எலும்பு கூடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது பாராளுமன்றத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது.