நெஞ்சோடு அணைத்த நிலையில் தாய்-சேய் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

நெஞ்சோடு அணைத்த நிலையில்  தாய்-சேய் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள செம்மணிப் புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூடுடன், சிறிய எலும்புக்கூடு ஒன்று நெஞ்சோடு அணைத்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை முழுவதுமாக வெளியே எடுத்த பிறகு, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த எலும்புக்கூடுகள் குறித்து உறுதியான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை முதல் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒன்றுக்கு அருகே ஒன்று புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கால்கள் மடிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் அசாதாரணமாக புதைக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இருப்பினும், மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் சட்ட மருத்துவ அதிகாரியின் ஆய்வுக்குப் பிறகு, அவருடைய அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.