கனடா பக்கம் பார்வை சாய்க்கும் அமெரிக்கர்கள் – காரணம் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கலாம் என தெரிவித்துள்ள நிலையில், இதற்கு எதிரான கருத்துகள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவில் சிலர், கனேடிய குடியுரிமை பெறும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, பல நாடுகளுடன் வர்த்தகத் தகராறில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க மக்களில் சிலர், அரசியல் சூழ்நிலை காரணமாக கனடாவில் குடியேற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்கர்களில் 20% பேர் தங்கள் மாகாணத்தைக் கனடாவுடன் இணைக்க விரும்புவதாக கூறியுள்ளனர். அதேசமயம், வெறும் 9% பேர் மட்டுமே கனடா, அமெரிக்காவுடன் இணைக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை, அமெரிக்கர்கள் கனடாவை புதிய பாதுகாப்பு இடமாக கருத தொடங்கியிருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.