38 வருடத்தில் செய்யாத பெரும் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம்: மோடி வருகையின் பின்னணி !

கடந்த 38 வருடங்களில், நடக்காத ஒரு பெரும் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை, இலங்கை இந்தியாவுடன் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படை வந்தது. 1987க்கு பின்னர் ஒரு பெரும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, இந்தியா இலங்கைக்கு வழங்க உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புக்கு 4ம் திகதி மாலை வருகிறார். அவர் 3 நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார். 7ம் திகதி மாலை அவர் தாய்லாந்து செல்ல உள்ளார். இன் நிலையில் 6ம் திகதி மோடி மற்றும் அனுரா ஆகியோர் அனுராதபுரம் சென்று முக்கிய தேரர்களை சந்திக்க உள்ளார்கள். 5ம் திகதி காலை முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திட உள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீனாவின் Yuan Wang என்னும் அதி நவீன வேவு பார்க்கும் போர் கப்பல், கடந்த 2022ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்தது. இதனால் கடும் இந்தியா கடும் சீற்றம் அடைந்தது. இதனை அடுத்து பல சுற்று பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று இருந்தது. அதன் பின்னர் தற்போது இந்தியா சென்ற அனுரா, இது போல இனி நடக்காது என்று மோடிக்கு உறுதி வழங்கியுள்ளாராம்.

அது போக இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த ஒரு செயலையும் இலங்கை இனி மேற்கொள்ளாது என்றும் அனுரா உறுதியளித்துள்ளார். இதனை அடுத்தே இலங்கை வர மோடி சம்மதம் தெரிவித்ததாக புது டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு திருகோணமலையை தாரை வார்த்துக் கொடுக்க தற்போது அனுரா அரசு முடிவு செய்துள்ளது என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.

அனுரா இந்தியாவின் காலடியில் விழுந்து விட்டார் என்பது தெளிவாகப் புரிகிறது. மேலும் இந்தியா 4.5B பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்கவும் உள்ளது. இந்திய அரசின் ஆதரவில் இலங்கையில் கட்டப்பட்ட சில நிலையங்களையும் மோடி திறந்துவைக்க உள்ளார்.