ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், அதற்குக் காரணம் அந்நாட்டு அரசாங்கம்தான் என கிளர்ச்சிப் படைகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. இது பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கத்தாரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியும், அதில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. கிளர்ச்சியாளர் குழுவான M23 (March 23 Movement) மற்றும் காங்கோ அரசாங்கம் இரண்டும், பேச்சுவார்த்தை முடங்கியதற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.
காங்கோ அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அமைதியை குலைக்கும் செயல் என கிளர்ச்சிப் படைகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், போர் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை அரசு ஏற்க மறுப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், காங்கோ அரசாங்கம், கிளர்ச்சியாளர்களின் அடாவடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி வருகிறது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், கிழக்கு காங்கோ மீண்டும் பெரிய அளவிலான போரைச் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே, இந்த வருடம் நூற்றுக்கணக்கானோர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புதிய மோதல், ஆயிரக்கணக்கான மக்களை மீண்டும் அகதிகளாக மாற்றக்கூடும் என சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு ஆகஸ்ட் 18 அன்று முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் மௌனம் காத்து வருகின்றனர். இந்த சூழ்நிலை, மேலும் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.