ஜேர்மனியின் வட பகுதில் உள்ள Rostock என்னும் நகரில், சனிக்கிழமை மாலை 8 மணி அள்வில், புதரில் ஒரு பெண்ணின் பிணம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. நாய் குட்டியை வெளியே கொண்டு சென்ற பெண் ஒருவர் முதலில் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு அறிவித்த நிலையில்.
அங்கே வந்த பொலிசார் பிணத்தை பார்த்து விட்டு, அது நிச்சயம் இறந்து கிடக்கும் ஒரு பிணம் என்று நம்பி. உடனே தடயவியல் நிபுணர்களை அழைத்துள்ளார்கள். அவர்கள் முதலில் பிணத்தை வைத்தியசாலை கொண்டு செல்ல நினைக்கவில்லை. தடயங்களை முதலில் தேடுவதே நல்லது என்று நினைத்துள்ளார்கள்.
அதனால் அந்த ஏரியா முழுவதும் 5 மணி நேரமாக புதரில் ஏதாவது கிடைக்கிறதா ? என்று தேடிக்கொண்டு இருந்துள்ளார்கள் தடயவியல் நிபுணர்கள். இதேவேளை 5 மணி நேரம் கழித்தே மருத்துவர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பரிசோதனை செய்தால். அது மனித உடலே அல்ல.
மாறாக அது செக்ஸ் டோல் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வாறு தயாரிக்கப்படும் செக்ஸ் டோல், மிகவும் நேர்த்தியாக மனித உடலைப் போல இருப்பதோடு. மனித தோலை ஒத்த நிறத்தில் இருப்பது வழக்கம். இதனை நம்பி 5 மணி நேரமாக தேடியுள்ளார்கள் ஜேர்மன் பொலிசார் என்பது உலகையே குலுங்க குலுங்க சிரிக்கவைத்துள்ளது.