மோடர்ன் லுக்கில் கயாடு லோஹர் – ரசிகர்கள் ரசிக்கும் புதிய புகைப்படங்கள்!

சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, நடிகை கயாடு லோஹர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கச் செய்தது.

மலையாள திரையுலகில் பயணம் தொடங்கிய இவர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, தனக்கென வெறும் சில மாதங்களில் ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

டிராகன் படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது கயாடு லோஹர் பகிர்ந்துள்ள அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ, ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹரின் மயக்கும் புகைப்படங்கள்!