செவ்வாய் பயணம் எளிது அல்ல! – விஞ்ஞானிகளை சிரமப்படுத்தும் பிரச்சனைகள்!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது கடந்த காலங்களில் ஒரு பெரிய சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது விண்வெளி பயணம் ஒரு சாதாரண டூராக மாறிவிட்டது. இப்போது விஞ்ஞானிகள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த திட்டம் நிறைய பிரச்சனைகள் மற்றும் சவால்களுடன் வருகிறது. செவ்வாய் கிரகம் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டாலும், அது ஒரு இறந்த பூமி போல இருக்கும். இதனால், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான பல சவால்கள் உள்ளன:

  1. நீண்ட தூர பயணம்: பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் 22.5 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல 3 நாட்கள் போதுமானது, ஆனால் செவ்வாய்க்கு 3 ஆண்டுகள் வரை பயணம் ஆகும். மேலும், பூமியிலிருந்து எந்த சிக்னல்களையும் செவ்வாய்க்கு அனுப்பினால், அது செவ்வாய்க்கு செல்ல 20 நிமிடங்கள் வரை ஆகும்.

  2. வெப்பக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்கள்: பூமியில் காந்தவலயம் காரணமாக பல ஆபத்தான சூரிய கதிர்கள் வடிகட்டப்படுகின்றன. ஆனால் செவ்வாயில் அப்படி ஒன்றும் இல்லை. இதனால் புற்றுநோய், நரம்பு பாதிப்புகள், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  3. உடல் மற்றும் இருதய பிரச்சினைகள்: செவ்வாய்க்கு செல்லும் போது, ஈர்ப்பு விசை இல்லாததால், உடலின் திரவங்கள் தலையை நோக்கி செல்கின்றன. இதனால் முகம் வீங்குதல், கண் பார்வை பாதிப்பு மற்றும் எலும்புகள் பலவீனமடைந்து, தசைகள் மெதுவாக செயலிழக்கும்.

  4. உளவியல் பிரச்சினைகள்: செவ்வாய்க்கு செல்லும் பயணம் மிக நீண்டது, அதனால் வீரர்கள் குறைந்தது 10 வருடங்கள் தனிமையாக இருக்க வேண்டும். இது மன அழுத்தம், மனநிலை பாதிப்புகள், நினைவாற்றல் குறைவு, தூக்க கோளாறுகள் போன்ற உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  5. குழுவினரிடையே மோதல்கள்: இந்த பயணத்தின் போது, ஒரே குழுவுடன் நீண்டகாலமாக இருப்பதால், குழுவினரிடையே சண்டைகள் மற்றும் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதனால், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நிச்சயமாக விஞ்ஞான மற்றும் மருத்துவ சவால்களை உள்ளடக்கியது.