தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தம் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் 1960 இல் அறிமுகமானார். அதன் பிறகு 1970 முதல் தற்போதுவரை தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
டாப் ஹீரோ அந்தஸ்தில் கமல்ஹாசன் இருந்து வந்தார். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று உலகநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றார். கமலஹாசன் என்றாலே அவரது நடிப்பு பிரம்மிக்க செய்துவிடும்.
ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்றவாறு அவரது நடிப்பை மிரள செய்வார் என்றே சொல்லலாம். வித்தியாசமான நடிப்பும் அவரது டயலாக் டெலிவிரியும் இன்றுவரை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய ரசனை ஆகவே இருந்து வருகிறது. கமல்ஹாசன் 69 வயதாகியும் தற்போது முன்னணி நடிகராகவே பல்வேறு சூப்பர் ஹிட் படங்களிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களிலும் தொடர்ந்து நடித்த வருகிறார்.
திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி அரசியல்வாதி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனின் முதல் மனைவி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான்.
இவர்கள் இருவரும் பத்தாண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த கட்டத்தில் ஒரு முறை வாணி கணபதிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது அப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் அவர் உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி அட்மிட் செய்யப்பட்டிருந்தார். அப்போது மனைவிக்கு ஆபரேஷன் என்று கூட பார்க்காமல் என்ன ஏது என கேட்காமல் கமல்ஹாசன் படம் பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.
படப்பிடிப்பு முடிந்து வந்து தன்னை விசாரிப்பார் என்று வாணி கணபதி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், என்ன எது என எதுவுமே கண்டுக்கொல்லாமல் இருந்துவிட்டார். இதை வாணி கணபதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாரா? அந்த சமயத்தில் கமல்ஹாசன் நடிகை சரிக்காவுடன் காதலில் காதலில் ஊறிப் போய்க் கிடந்தார். அதனால் அவருடன் காதலித்த சமயத்தில் வாணி கணபதியை கண்டு கொள்ளவே இல்லையாம். இதுதான் அவர்களுக்கு பிரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று தகவல்கள் கூறுகிறது.