பிரான்ஸ் நாட்டின் எல்லையான “கலை” என்னும் இடத்தில் லட்சக் கணக்கான அகதிகள் கூடாரம் அடித்து தங்கி உள்ளார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பிரித்தானியாவுக்குள் வருவது தான். மிகவும் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு, ஆங்கிலக் கால்வாயை கடந்து அவர்கள் பிரிட்டனுக்குள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றதால் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து. பிரான்ஸ் நாடு , இந்த அகதிகள் பிரிட்டன் செல்வதை தடுக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் ரம்பால் தோன்றியுள்ள முறுகல் நிலை காரணமாக, அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவோடு நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளது.
இன் நிலையில் தான், பிரான்சில் இருந்து படகில் பிரிட்டன் வந்த அகதிகளை மீண்டும் பிரான்சுக்கு அனுப்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ள தயார் என்று பிரான்ஸ் இன்று அறிவித்துள்ளது.