விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா – நாக சைதன்யா (வீடியோ)

விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சமந்தா – நாக சைதன்யா (வீடியோ)

மந்தா – நாக சைதன்யா இருவரும் விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் சந்தித்துள்ளனர்.

இந்திய சினிமா உலகில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக்கண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் டாப் நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அங்கு பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து ஒருவருக்கொருவர் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து சமந்தா தமிழ் திரைப்படங்களிலு,ம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சில பல தோல்விகளையும் சந்தித்து வருகிறார். இவர் முன்பை விட இப்போ அதிகம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதனிடையே மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா சிகிச்சை எடுத்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தனது தொழிலை கைவிடாமல் தொடர்ந்து சினிமா தொழிலில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகி அங்கும் கவர்ச்சி நடிகை பலம் வந்து கொண்டிருக்கிறார். தாறுமாறாக கிளாமரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா. வெப் சீரிஸ், கவர்ச்சி கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பணத்தை அள்ளிக்கொடுத்தால் தாராளமாக நடிக்கிறேன் என ஓப்பனாகவே கூறி வருகிறாராம்.

இந்த நிலையில் சமந்தா – நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து புரிந்த பிறகும் இருவரும் சினிமா சார்ந்த விஷயத்திற்கு கூட ஒரே இடத்தில சந்தித்ததே இல்லை. ஆனால் தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் 2024ல் அடுத்து வர இருக்கும் ஷோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
அதில் சமந்தா நடிக்கும் Citatel Honey Bunny சீரிஸ் மற்றும் நாக சைதன்யா நடிக்கும் Dhootha என்ற தெலுங்கு வெப் சீரிஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அறிமுகப்படுதப்பட்டன. அப்போது சமந்தா – நாக சைதன்யா ஒரே மேடை ஏறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: