சுட்ட பொலிசார் குண்டு பிடிக்கவில்லை இதனால் நாய் அலேட் ஆகிவிட்டது ! இனி என்ன நடக்குமோ ?

Source : Police : An ‘aggressive’ XL Bully remains on the loose in a British city after evading armed police marksmen.

ஏற்கனவே இந்த நாயை தெருவில் கண்ட உடனே பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். ஆனால் குண்டு நாய் மேல் பாயவில்லை. நாய் உடனே தப்பி ஓட ஆரம்பித்து விட்டது. இதனால் நாய் அலேட் ஆகி விட்டது….

ஆயுதம் ஏந்திய பொலிசார் ரோந்து, மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். கண்டால் உடனே சுட உத்தரவு வேறு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். என்னடா ஒரு பெரும் பயங்கரவாதி சிறையில் இருந்து தப்பி விட்டாரா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது இல்லை மேட்டர். மிகவும் கொடுமையான XL ரக புல் டோக் நாய் எஜமானிடம் இருந்து தப்பி , வீட்டில் இருந்து வெளியேறிவிட்டது.

உண்மையில் சொல்லப் போனால் இந்த நாய், 2 புலிகளுக்கு சமனானது. இதனை எஜமானால் மட்டுமே அடக்க முடியும். தற்போது இது வீட்டில் இருந்து தப்பிச் சென்றதால், எந்த நேரத்திலும் வேறு நாய் குட்டிகளை இது தாக்கக் கூடும் என்பது மட்டும் அல்ல. இந்த நாய் மனிதர்களையும் தாக்கும். இதனால் பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் South Yorkshire Police பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதன் காரணத்தால் முதியவர்கள் எல்லாம் வீட்டில் இருக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. என்ன கொடுமை சரவணா ?  இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், பொலிஸ் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியின் குண்டில் இருந்து இது தப்பியுள்ளது என்பது தான். ஒரு நாயைக் கூட சுட முடியவில்லையே , ரஷ்யா படை எடுத்தால் என்ன ஆகும் என்று கேள்வி கேட்டு விடாதீர்கள் மக்களே ///// வாய்ப்பே இல்லை ராஜா …