தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கொசல நுவன் இன்று (வயது 38) காலமானார் என வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
திடீரென ஏற்பட்ட இதயஅவசர நிலை காரணமாக அவர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொசல நுவன், சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற இளம் எம்.பி.யாக இருந்ததோடு, தேசிய மக்கள் சக்தியில் முக்கிய இளைய தலைவராக வலம் வந்தவர்.
மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.