உயிரைக் குடித்த அநீதி! கிருசாந்திக்கு 29 ஆண்டுகள் கடந்தும் ஓயாத கண்ணீர்!

உயிரைக் குடித்த அநீதி! கிருசாந்திக்கு 29 ஆண்டுகள் கடந்தும் ஓயாத கண்ணீர்!

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, ஒட்டுமொத்த தமிழினத்தின் சோகத்தையும் மீண்டும் ஒருமுறை எதிரொலித்துள்ளது.

கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட செம்மணி சந்திப் பகுதியில், வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இந்த நினைவேந்தலில், கிருசாந்தியின் உறவினர்கள் மற்றும் பலர் கண்ணீருடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 29 ஆண்டுகளாக மாறாத வடுவாக இருக்கும் இந்த சோக சம்பவம், தமிழர்களின் மனதிலிருந்து இன்னும் நீங்கவில்லை. நினைவேந்தலின் போது, ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இது, அந்தப் பேரிழப்பின் வலியைச் சுமந்து நிற்கும் தமிழர்களின் குரலாக ஒலித்தது.