படுகேவலமாக பொய் சொன்ன இஸ்ரேல்: 15 பேரை கொன்ற இஸ்ரேல் படை !

பாலஸ்தீன பகுதியான காஸாவில், வாகண தொடரணி ஒன்றின் மீது சுட்டு அதில் பயணித்த 15 பேரை கொலை செய்தது இஸ்ரேல் படை. ஆனால் அந்த வாகனத்தில் சென்ற அனைவருமே முதல் உதவி பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள். அவர்கள் பயணித்த வாகனத்தில், மிகவும் தெளிவாக மருத்துவ குறியீடுகள் போடப்பட்டு இருந்தது.

ஆனால் இஸ்ரேலியப் படைகள், அது ஹமாசின் வாகனம் என்று முன்னர் தெரிவித்து இருந்தார்கள். இருப்பினும் தாக்குதலுக்கு ஆளான வாகனத்தில் இருந்த வீடியோ பதிவை பார்த்தவேளை, இஸ்ரேலியப் படைகள், அது மருத்துவர்களின் வாகனம் என்று அறிந்தே சுட்டுள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை அடுத்து தாம் தவறுதலாக சுட்டு விட்டதாக இஸ்ரேல் படைகள் தற்போது ஒப்புகொண்டுள்ளார்கள். இனி என்ன பயன் ? இறந்த 15 பேரும் உயிருடன் வரவா போகிறார்கள் ?