சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் (பகவதி பெருமாள்) உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை, நகைச்சுவை கலந்து சொல்லியிருந்ததால், அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்தின் அடுத்த திட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளைக் கொண்டதாக இருக்குமா அல்லது வேறுபட்ட கதையம்சத்துடன் இருக்குமா என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.