ஜவான் படத்திற்குப் பிறகு, பிரபல இயக்குநர் அட்லீ தனது ஆறாவது திரைப்படத்தை அறிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது 22வது திரைப்படமாக அமைகிறது. பெரும் பட்ஜெட்டில் தயாராகும் இத்திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள், லண்டனில் உள்ள LOLA VFX நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன. அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், மற்றும் அவதார் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களுக்கு பணியாற்றிய LOLA VFX-ல், ஸ்கிரிப்டைப் படித்த முக்கிய நபர்கள் பெரிதும் வியந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிவிப்பு வீடியோவில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் LOLA VFX-ல் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கலக்கவிருக்கும் பிரம்மாண்ட சினிமாவின் அறிவிப்பு வீடியோ இதோ வந்தாச்சு!