விவசாயிகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. உடனடி தீர்வு காண…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த செய்தியை பகிருங்கள்

விவசாயிகளை வற்புறுத்தி மானிய உரங்கள் விற்பனையின் போது இதர இடுபொருட்களை விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட மானிய உரங்கள் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்கப்படுகிறது.

இந்த உரங்களை விற்பனை செய்யும் போது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சில உர விற்பனையாளர்கள் இதர இடுபொருள்களையும் வாங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். எனவே கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். உரகட்டுப்பாட்டு ஆணை 1985-க்கு புறம்பான செயலாக இத்தகைய விற்பனை உள்ளது.

இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக விற்கும் விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்கள் மீது புகார் அளிக்க மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரிடம் மற்றும் மாநில உர உதவி மைய கைபேசி எண் 9363440360-க்கு தெரிவிக்கும்படி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us