மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் குறைந்தது 21 பேர் படுகாயமடைந்துள்ளனர், இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கதிகலங்க வைத்த விபத்து:
மாட்ரிட்டின் தென்-மத்திய மாவட்டமான வாலேகாஸில் (Vallecas) உள்ள ஒரு உணவகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விபத்தின் காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிருக்கு போராடும் மக்கள்:
இந்த வெடிப்பு உணவகத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் மாட்ரிட் நகர மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.