சீனாவின் அதி நவீன போர் விமானம், மற்றும் அமெரிக்கா வைத்திருக்கும் எந்த ஒரு போர் விமானத்தாலும் இந்த J20 போர் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியாது என்று சொல்லப்படும் J20 விமானம் ஒன்று அமெரிக்க ஜோர்ஜியா விமான நிலையத்தில் தரித்து நின்றது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரு பயணி தற்செயலாக எடுத்த புகைப்படமே இன்ரர் நெட்டில் வைரலாக பரவியது.
சீனாவின் அரக்கன் என்று அழைக்கப்படும் இந்த J20 போர் விமானம் எப்படி அமெரிக்க மண்ணில் வந்தது என்று பலரும் திகைத்துப் போய் விட்டார்கள். மிகவும் வைரலாக பரவிய இந்த புகைப்படத்தை , பல மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளார்கள். இதனால் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
சீனாவிடம் இருந்து அமெரிக்க இந்த விமானத்தை வாங்கியதா என்று மக்கள் முதலில் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள். ஆனால் இப்படி ஒரு அதி நவீன விமானத்தை சீனா எந்த ஒரு நாட்டிற்கும் விற்பனை செய்யாது. ஏன் என்றால் அது சீன நாட்டுக்கே ஆபத்தான விடையம். அப்படி என்றால் என்ன தான் நடந்தது ? என்று கேட்டால் …
அமெரிக்க நிறுவனம் ஒன்று, சீனாவின் J20 மாடல் விமானம் ஒன்றை தயாரித்து. அது ஒரிஜினல் விமானம் எந்த வேகத்தில் பறக்குமோ, அந்த வேகத்தை இந்த டம்மி விமானமும் பறக்கும்படி செய்துள்ளதாம். மேலும் சீனக் கொடிகள் கூட அந்த விமானத்தில் உள்ளது. இதனை பறக்க விட்டு, அதனை எப்படி தாக்குவது என்று அமெரிக்க விமானிகள் பயிற்ச்சி எடுத்து வருகிறார்களாம். ஒட்டு மொத்தத்தில் அமெரிக்கா என்ன தான் , மார் தட்டிக் கொண்டாலும்.. சீனா வைத்திருக்கும் ஆயுதங்களை பார்த்து கிலி கொள்கிறது என்பதே உண்மை !