லண்டன் தமிழர்களே உஷார் ! வங்கியில் 6,000 பவுண்டுகளுக்கு மேல் உள்ளதா ? ஆப்பு …

DWP என்று சொல்லப்படும் Department for Work and Pensions என்ற அரசு நிறுவனம், ரகசியமாக பலரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கான அனுமதி அரசாங்கத்தால் சமீபத்தில் தான் வழங்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம், பெனிவிட்டில் அதாவது வேலை இல்லை என்று சொல்லி அல்லது வேறு விதத்தில் அரசாங்க உதவித் தொகையை எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் வங்கிகளை தான் தற்போது DWP நோட்டமிட ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டமாக பேர்மிங்ஹாம் நகரில் நேற்று முதல்(15) இந்த சோதனைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளதாகவும். இது இனி நாடு தழுவிய ரீதியில் நடக்கும் என்று அந்த திணைக்கள் தெரிவித்துள்ளது. அரசாங்க உதவித் தொகை எடுத்துக் கொண்டு, அதே நேரம் வங்கியில் 6,000 பவுண்டுகளுக்கு மேல் இருந்தால் அது சட்டப்படி குற்றம்.

இதனால் அரச உதவித் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்துமாறு DWP கோரும், இல்லையென்றால் நீதிமன்ற உத்தரவை நாடி வீட்டிற்கு பெயில்-லீவை அனுப்பும். அதுவும் இல்லையென்றால் நீங்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிகும் வேளை உங்கள் சம்பள தொகையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி எடுக்கும் அதிகாரம் கூட DWP க்கு உள்ளது,