தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்(23). இவர் கோவையில் தங்கி அரசுக் கல்லூரியில் பயின்றுள்ளார். அப்போது, அவருக்கு அதே கல்லூரியில் ஒன்றாக படித்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான செல்போன் உரையாடலின் போது கோபிநாதன் அந்த இளம் பெண்ணை நிர்வாணமாக வீடியோ காலில் வரச் சொல்லி அதனை அப்பெண்ணிற்கு தெரியாமல் தனது செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருந்துள்ளார்.
இதனையறியாமல் அப்பெண்ணும் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. கோபிநாதனும் அப்பெண்ணிடம் பேச பல்வேறு வழிகளில் முயன்றும் முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபிநாதன் தான் காதல் வயப்பட்டிருந்த போது தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாசார் கோபி நாதனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோபிநாதன் அந்தப் புகைப்படங்களை வேறு யாருக்கெல்லாம் அனுப்பி வைத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.