பிரித்தானியாவில் வீடுகளுக்கு மற்றும் வியாபார நிலையங்கள் என்று சகல இடங்களுக்கும் தண்ணீர் வழங்கும் நிறுவனம் தான் தேம்ஸ் வாட்டர்(Thames Water). வீட்டுக்குள் வரும் கன அடி தண்ணீருக்கும் காசு, வீட்டில் இருந்து கழிவாக வெளியேறும் தண்ணீருக்கும் காசு என்று, பில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கம்பெனி தான் தேம்ஸ் வாட்டர். இவர்கள் கடல் நீரை மற்றும் ஏரிகளில் உள்ள நீரை வடிகால் செய்து, சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இன் நிலையில் 40% விகிதத்தால் தண்ணீரின் விலையை அதிகரிக்க உள்ளதாக அதன் CEO இன்று(28) தெரிவித்துள்ளார். இதனால் தற்போது நீங்கள் ஒரு வருடத்திற்கு எவ்வளவு பணத்தை கட்டுகிறீர்களோ, அதனை விட மேலதிகமாக £200 பவுண்டுகளை கட்ட வேண்டி கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட உள்ளீர்கள். 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் , அரசுக்கு ஏற்பட்ட 43B பில்லியன் நஷ்டத்தை, மக்கள் மீது சுமத்திய பிரித்தானிய அரசாங்கம், அசுர வேகத்தில் வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் கடந்த 2 வருடங்களாக மக்கள் விவரிக்க முடியாத சுமையில் உள்ளார்கள்.
பிரித்தானியாவில் குடும்பமாக வாழவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்கத்தினர் மற்றும் வேலை பார்க்கும் நபர்களே பாதிப்படைந்துள்ளார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. இதனால் சுயதொழில் செய்வோர் பெரும்பாலும் பாதிப்படையவே இல்லை. ஆனால் வேலை செய்து வாழ்ந்து வரும் மக்கள் மேலும் மேலும் கடன் சுமையில் உள்ளதோடு, வட்டியாக பெரும் தொகைப் பணத்தை கட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் போதாக்குறைக்கு Thames Waterம் தனது விலையை உயர்த்தியுள்ளது. பிரித்தானியாவில் சராசரியாக ஒவ்வொரு விடும் குறைந்த பட்சம் £500 பவுண்டுகளை தண்ணீர் கட்டணமாக வருடம் ஒன்றிற்க்கு கட்டி வருகிறது. இதில் மேலும் £200 பவுண்டுகள் அதிகரிக்க உள்ளது என்பது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தையும், தற்போதைய அரசு மீது கடும் அதிருப்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது.