உலக அளவில் மிகவும் பிரசித்திபெற்ற பல்கலைக் கழகம் மற்றும் ஆய்வு கூடத்தை வைத்திருக்கும் கேம் பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சற்று முன்னர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். பூமியைப் போல, கடல் உள்ள ஒரு கிரகத்தை அவர்கள் கண்டு பிடித்துள்ளதோடு. அந்தக் கிரகத்தில் ஏலியன்(வேற்று) உயிரினங்கள் வாழ்கிறது என்பதனையும் அவர்கள் 99% விகிதம் உறுதிசெய்வதாக தெரிவித்துள்ளார்கள். இதன் கருத்து என்னவென்றால் அவர்கள் கைகளில் ஏதோ ஆதாரம் சிக்கியுள்ளது என்பது தான் !
K2-18b என்று இந்தக் கிரகத்தை விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பூமியில் இருந்து பல ரில்லியன் KM க்கு அப்பால் இந்தக் கிரகம் உள்ளது. இருப்பினும் இது எப்படி இருக்கும் என்ற படத்தை கூட விஞ்ஞானிகள் இன்று(17) வெளியிட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.
இந்த K2-18b கிரகத்தில் உள்ள உயிரினங்கள், மனிதர்களைப் போல அறிவாற்றல் உடையவர்களா ? இல்லை ஆடு மாடுகளைப் போன்ற உயிரினங்களா என்ற கேள்விகளுக்கு இன்னும் விஞ்ஞானிகள் பதில் கூறவில்லை. இருப்பினும் அந்தக் கிரகத்தில் இருந்து வந்த ஒரு சமிஞ்சையை(எலக்ரானிக்) வைத்தே குறித்த கிரகத்தை விஞ்ஞானிகள் கடுமையாக ஆராயத் தொடங்கியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வேறு கிரகங்களில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா என்று சோதனை செய்வது எப்படி ? என்று கேட்டால் அதனை ஸ்கை-ஸ்கேன் என்று அழைக்கிறார்கள். அமெரிக்காவின் James Webb Space Telescope விண் கலம், பல ஆய்வு தகவல்களை பூமிக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. இதில் இவர்கள் முக்கியமாக பார்பது, (DMS)என்ற துகள்களையே. dihmethyl sulphide மற்றும் dimethyl disulphide (DMDS) இந்த மூலக் கூறுகள் விண் வெளியில் காணப்பட்டால் போதும். அதனை சுற்றி இருக்கும் ஏதாவது ஒரு கிரகத்தில் நிச்சயம் உயிரினம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. காரணம் …
இவையே முதல் செல் கலங்களை உருவாக்க கூடிய microbial என்று அழைக்கப்படுகிறது. உயிரினம் தோன்ற ஏதுவான இந்த 2 மூலக் கூறுகளும் அந்த கிரகத்திலும், அதனை அண்டிய பகுதியிலும் காணப்படுகிறது. எனவே நிச்சயம் ஒரு உயிரினம் அங்கே உருவாகி இருக்கும் என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கிறார்கள். இனி இந்தக் கிரகம் நோக்கி ஒரு சாட்டலைட்டை ஏவ, உலக நாடுகள் முடிவு செய்யக் கூடும்.
அதிர்வுக்காக
கண்ணன் :